இயக்குனர் கௌதமன் நடிப்பில் வெற்றி பெற்ற படையாண்ட மாவீரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது

கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய “படையாண்ட மாவீரா” திரைப்படம் தற்போது
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது.

கனவே கலையாதே படத்தின் இயக்குனராக தமிழ்த் திரையுல
கில் அடியெடுத்து வைத்தவர் வ.கௌதமன்.
தொடர்ந்து
மகிழ்ச்சி படம் மூலம் நாயகனாகவும் முத்திரை பதித்தார். சந்தனக் காடு தொடர் மூலம் உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
மறுபடியும் இயக்கி நாயகனாக நடித்ததே, ‘படையாண்ட மாவீரா.’
வி.கே.புரொ டக்க்ஷன்ஸ் குழுமம் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்தனர். படம் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் சேர்ந்து பெறும் வெற்றியை சுவைத்தது.

படத்தில் நாயகியாக பூஜிதா நடிக்க, முக்கிய கதாப்பாத்திர ங்களில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், “ரெடின்” கிங்ஸ்லி, “நிழல்கள்” ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், “ஆடுகளம்” நரேன், “பாகுபலி” பிரபாகர், “வேதாளம்” கபீர், மதுசூதனராவ், தீனா
தலைவாசல்” விஜய், ஏ.எல். அழகப்பன் நடித்திருக்கிறார்கள்.

மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார்
பின்னணி இசை சாம் சிஎஸ்.
பாடல்கள் வைரமுத்து. “ஸ்டண்ட்” சில்வா, நடனம் தினேஷ், ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு.
மக்கள் தொடர்பு நிகில் முருகன்.

சாதி, மதம், மொழி, இனம், நாடு கடந்து தன் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் இப்படைப்பு மெய்சிலிப்போடு கொண்டாட வைக்கும் என உறுதிபட சொல்லும் இயக்குநர் வ.கௌதமன், மேலும் இப்படைப்பினை குடும்பங்களோடு பார்ப்பதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதும் மிக மிக முக்கியமானது என்றார்.
படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.