ராட்ட –திரை விமர்சனம்

தறி நெசவாளரான சக்திவேல் நாகப்பன் தனது தொழிலில் அதிக அக்கறை கொண்டவர். அதனால் பணிபுரியும் பட்டறையில் அதிகமாக கூலி வாங்கும் தொழிலாளியாக இருக்கிறார்.
அதே பட்டறையில் புதிதாக வேலைக்கு சேரும் பட்டதாரிப்பெண் ஹெலனுக்கும், சக்திவேல் நாகப்பனுக்கும் இடையே நட்பு வளர்ந்து அது காதலில் முடிகிறது.
இவர்களின் காதல் தெரியாத தறிப் பட்டறையின் பேச்சுலர் முதலாளி ஹெலனை தனது இல்லத்தரசியாக்க விரும்புகிறார்.

முதலாளியின் மனதில் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டதால் பதற்றம் அடையும் ஹெலன், அவசரம் அவசரமாக சக்திவேல் நாகப்பனை திருமணம் செய்கிறார். இவர்களது இந்த திடீர் திருமணத்தால் இவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி
யடைந்தாலும், இவர்கள் தம்பதியானதை வரவேற்று வாழ்த்து கிறார்கள். மகிழ்ச்சியோடு இல்லற வாழ்க்கையை தொடங்கும் இவர்களது வாழ்க்கையில்
திடீர் பேரிடியாக, சக்திவேல் நாகப்பன் தனது தொழிலில் தடுமாறத் தொடங்குகிறார்.
வேலையில் முழுமையாக ஈடுபட முடியாமல் தடுமாறுகிறார்.
அதுவரை பாராட்டியவர்கள் அவரது வேலைப் பாட்டில் குறை சொல்ல, அவரது மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

திருமணத்திற்குப் பிறகு இதெல்லாம் நடக்க, நொந்து போகிறார் மனைவி. ஆனாலும் கலங்காமல், கணவரின் நிலையை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

நாயகி ஹெலனின் இந்த முயற்சியில் நாயகனின் நிலை மாறியதா ? என்பதை உணர்வு பூர்வமாக சொல்வதே இந்த
ராட்ட.

படத்தின்
கதை எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் சக்திவேல் நாகப்பன், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். முதல் படத்தில் இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என்று ஏற்றுக் கொண்ட பொறுப்புகள்
அத்தனையிலும் முத்திரை பதித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக தறி பட்டறையில் பணியாற்றும் கைத்தறி நெசவாளர் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கும் சக்திவேல் நாகப்பன், தறி ஓட்டுவது, நாயகியிடம் காதல் வயப்படுவது மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுது புலம்புவது, என்று அனைத்து ஏரியாவிலும் எல்லை தாண்டாமல் நடித்து கவனம் ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹெலன், பக்கத்து வீட்டு பெண் போல் அத்தனை பாந்தம். கணவனை தேற்றி அவரது நிலையை மாற்றும் முயற்சியில்ஒரு பொறுப்பான மனைவியை கண்முன் நிறுத்துகிறார்.

தறி பட்டறையின் முதலாளியாக வரும் சித்தா தர்ஷனுக்கு ‘சித்தா’ படத்திற்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம். அவரும் அதை உணர்ந்து நடித் திருக்கிறார்.
சொத்து சுகம் இருந்தும் சோகத்தில் வலம் வரும் அவரது கேரக்டர் அவரது நடிப்பில் தனித்துவம் பெறுகிறது.
சாப்ளின் பாலு,
சந்திரன் கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதை மாந்தர்களாக தங்கள்
பாத்திரங்களில் பளிச்.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் கேமரா கதையோடு இணைந்து பயணிக்கிறது.
இசையமைப்பாளர் மணி கிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்க சுகம். குறிப்பாக முதல் இரவு பாடல் காட்சி பரம சுகம்.
தறிப் பட்டறை தொடர்பான திரைப்படத்திற்கு நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர். மூதுரை பொய்யாமொழியின் பணி மிகப்பெரிய துணையாக பயணித்திருப்பது முழுப் படத்திலும் தெரிகிறது.

முதல் படத்திலேயே எழுத்து, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முகத்திறன் கொண்டவராக அறிமுகமாகி
யிருக்கும் சக்திவேல் நாகப்பன், படத்தில் காதல், காமெடி, காமம், கோபம், ஏமாற்றம், ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் அழகாக கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் இந்த ராட்டை வேகமாகவே சுற்றி சுழல்கிறது.
ரேட்டிங் : 6.5/10.