ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள தமிழக கிராமம் ஒன்றில் கணவன், மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்
கள். அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனிக்கு சில தயடங்கள் கிடைக்கின்றன. அதை வைத்துக்கொண்டு விசாரணையை தொடரும் நிலையில் , அதே பாணியில் மற்றொரு தம்பதி கொல்லப் படுகிறார்கள்.
இப்படி நான்கு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் காவல்துறை கொலையாளிகளை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் தனிப்படை அமைக்கிறது. அந்த குழுவில் சமுத்திரகனியையும் இணைத்துக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர்
ஷிவதா.
கொலை செய்தது இரண்டு பேர் என்றும், அவர்கள் தமிழக எல்லையில் உள்ள நான்கு பேரை மட்டுமின்றி, ஆந்திராவிலும் இதே பாணியில் 76 ஜோடிகளை கொலை செய்திருக்கிறார்கள்,என்ற உண்மையை சமுத்திரக்கனி கண்டு பிடிக்கிறார்.
கொலை செய்யப்பட்டவர்க
ளின் வீடுகளில் இருக்கும் பணம், நகைகள் எதையும் எடுத்துச் செல்லாத இந்த கொலை யாளிகள் ஆணின் இடுப்பு அருணாக்கயிறை
யும், பெண்ணின் தாலி சங்கிலியை யும் மட்டுமே பறித்து செல்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார்
கள் என்பதை சமுத்திரக்கனி கண்டுபிடிக்க… இதையே முக்கிய தடயமாக கொண்டு, முகம் தெரியாத கொலையாளிகளை பிடிக்க களத்தில் இறங்கும் காவல்துறை , அவர்களை எப்படி பிடித்தது ?, அவர்களின் தொடர் கொலைக்கான காரணம் என்ன ? என்பதை எதிர்பாராத திருப்பங்களோடு சொல்வதே இந்த ‘தடயம்’.
முதல் பாகத்தின் ஆரம்பத்திலேயே கொடூர கொலையுடன் கதையை தொடங்கி விடுகிறார்கள். இரண்டாம் பாகத்தில் கொலையாளி யார் என்பதை சொல்லி விடுகிறார்கள். அப்படியானால் கதையில் சஸ்பென்ஸ் போய் விடும் என்று தோன்றும் அல்லவா… அதுதான் இல்லை. காவல் துறையின் தேடலில் காட்சிகள் விறு
விறுப்பாகவே போகிறது. கைக்கெட்டும் தூரத்தில் வில்லன்கள் இருந்த போதிலும் காவல்துறை அவர்களை மட்டும் நல்லவர்கள் என்பதெல்லாம் கதையின் சுவாரசிய பக்கங்கள் ஆகி விடுகிறது. சமுத்திரக்கனி, காவல்துறை சார்ந்த கதாபாத்திரங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், இதில் தன்னை புதியவராக காட்டிக்கொண்டிருக்கிறார். துறை ரீதியாக தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் மூலம் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஒரு நபராக நடித்திருக்கும் சமுத்திரக் கனி, தனது இயல்பான நடிப்பால் அந்த பாத்திரத்துக்கு வலு கூட்டி இருக்கிறார். உடல் ரீதியாகவும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது புத்திக் கூர்மை மூலம் கொலை குற்றவாளிகளை நெருங்குவதோடு, அவர்களின் தொடர் கொலைகளின் மறைக்கப்பட்ட உண்மைகளை ஒவ்வொன்றாக கண்டறியும் அவரது விசாரணை காக்கி சட்டையின் கம்பீரம் ஆகிவிடுகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஷிவதா, தனது அளவான நடிப்பின் மூலம் தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். புஷ்பா’ பட புகழ் ராஜ் அந்த வில்லன் கேரக்டரை தனது ஆழமான நடிப்பால் தாங்கி பிடிக்கிறார். தனது கண்கள் மற்றும் மேனரிசம் மூலம் மிரட்டியிருக்கிறார். அவரது தம்பியாக நடித்திருக்கும் பிரேமும் தனது பங்கிற்கு உடல் மொழி மூலம் பயமுறுத்துகிறார்.
காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், சுந்தரபாண்டியன், கொற்றவை, விஷாகன், புலிப் பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் கிடைத்த பாத்திரங்களில் பளபளக்கிறார்கள்.கே-வின் ஒளிப்பதிவும் விபின் பாஸ்கரின் இசையும் இந்தக் கொலை கதைக்குள் வில்லன் களின் பிளாஷ்பேக் வரை இதயத்தின் லப் டப்பை எகிற வைக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் நவீன்குமார் பழனிவேல், உண்மை சம்பவத்தையும், அதன் பின்னணியையும் வில்லன் பக்க நியாயம் வரை காட்சிப்படுத்தியதில் தேர்ந்த இயக்குனராக வெளிப் படுகிறார்.
அந்த வகையில் இந்த தடயம் மனதில் ஆழமாகவே தடம் பதிக்கும்.
ரேட்டிங் : 5.6/10.