தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதியபடம் சேயோன்.இப்படத்
தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவர் நடிக்கும் 26 ஆவது படம் இது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த அதிரடியான வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் முதல்பார்வை கடந்த பிப்ரவரி 16 அன்று வெளியிடப்பட்டது.
கிராமிய பின்னணியில் மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடிக் காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் ரசிக்கும்படியான படமாக சேயோன் உருவாக்கப்படுகி
றது.
அமரன் படத்துக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா, ஆர்.மகேந்திரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது.
அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்
ளது.
படம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூறு கையில், “விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களைப் பற்றிய படம்தான் ‘சேயோன்’.
அனைத்துத் தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற படமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
படத்தில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் நடிகர் கமல்ஹாசனும் இணைகிறார்.
படத்தில் இடம் பெறும் ஒரு முக்கிய வேடத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அந்த வேடம்,பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான விருமாண்டியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
படத்தின் இயக்குநர்,இப்படம் விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரண்டு தெய்வங்களைப் பற்றிய படம் என்று சொல்லியிருக்கிறார்.அதன்படி முருகராக சிவகார்த்திகேயனைச் சித்தரித்துவிட்டு விருமாண்டியாக கமல்ஹாசனைச் சித்தரிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் கமலும் நடிக்கிறார் என்பது திரைப்பட ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி தான்.
