யூத் — திரை விமர்சனம்

10-ம் வகுப்பில் பார்டரில் பாஸ் ஆகும் கென் கருணாஸ், 11-ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் போகாமல் காதல் மீது கவனம்
பதிக்கிறார். அந்த பருவத்துக்கே உரிய வயதுக் கோளாறில் எந்த நேரமும் காதல் மயகத்திலேயே இருக்கும் கென் கருணாஸ், 12ம் வகுப்பு வருவதற்குள் மூன்று பள்ளிப் பருவ காதல்களை கடக்கிறார்.
மகன் எப்படியாவது கல்வியில் கரை சேர்ந்து விடுவான் என்று அம்மாவும், இவன் எங்கே தேறு வான் என்று அப்பாவும் எண்ணிக் கொண்டிருக்க…
இந்நிலையில் காதல் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கென் கருணாஸுக்கு, அதை விட வாழ்க்கையில் மிக முக்கியமானது படிப்பு தான் என்பதை புரிய வைக்கக் கூடிய ஒரு சம்பவம் நடக்கிறது.
அதுவும் அவரது காதல் லிஸ்டில் மூன்றாவதாக உள்ள மாணவி மூலம் நடக்கிறது.
அது என்ன ? அதன் மூலம் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது, என்பதை இளமை மயமாய் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகனாக நடித்ததோடு படத்தை இயக்கவும் செய்திருக்கிறார் கென் கருணாஸ். பள்ளி மாணவர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறார். காமெடி, செண்டிமெண்ட் ஏரியாக்களிலும் இறங்கி அடிக்கிறார். முன்னணி நடிகர்களின் சாயல் எதுவும் இன்றி நடிப்பில் தனக்கான ராஜபாட்டை போட்டிருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டு. அம்மா பிள்ளையாக படம் முழுக்க வந்தாலும் அப்பா
பிள்ளையாகவும் அவர் மாறும் கிளைமாக்ஸ் மனதுக்கு ரொம்பவே நெருக்கமானது.
நாயகிகள் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று நாயகிகளும் பொருத்தமான பாத்திரத் தேர்வை தங்கள் நடிப்பில் நிரூபிக்கிறார்கள். மூவரில் நடிப்பில் முந்தி நிற்கிறார் அனிஷ்மா. காதல், குறும்பு, அன்பு என்று மூன்று விதமான உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் இடங்கள் அத்தனையும் அக்மார்க் அமர்க்களம்.
காதலுக்கு எதிரியாக வரும் அந்த இரண்டு மாணவிகள் கேரக்டர்களும் சிறப்பான நடிப்பில் முன்னிற்கின்றன.
தென் கருணாசின் நண்பர்களாக வருபவர்களும் சிறப்பு. குறிப்பாக எதற்கெடுத்தாலும் அழத் தொடங்கும் அந்த மாணவன் அடடே ரகம்.
கென் கருணாஸின் தந்தையாக வரும்
சூரஜ் வெஞ்சரமூடு தனது காதல் தோல்வியை சரக்கு போட்ட நிலையில் மனைவியிடம் வெளிப்படுத்தும் இடங்களிலும், இவன் எங்கே தேறப் போகிறான் என்று மகனை பார்க்கும் இடங்களிலும் நடிப்பில் முத்திரை பதித்து விடுகிறார். ‘உள்ளே பாசம் வெளியே ரோஷம்’ என்ற அந்த அப்பா கேரக்டரை அழகாக நமக்குள் கடத்தி விடுகிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினிக்கு இந்தப் படம் அவரது நடிப்பில் இன்னொரு ஜாக்பாட். வழக்கமான அப்பாவித்தனமும், அளவில்லா அன்பும் கொண்ட அம்மாவாக மனம் முழுக்க நிறைந்து போகிறார்.
ஸ்கூல் பிரின்சிபாலாக வரும் நளினி பற்றி சொல்லாவிட்டால் இந்த விமர்சனம் நிறைவு பெறாது. கிளைமாக்ஸ்சில்
கென் கருணாசிடம் பேசும் அந்த ஒரு வசனம் போதும் இவருக்கு. அசத்திட்டீங்க அம்மணி.
காட்சிகளை யூத்புல்லாக கண் முன் நிறுத்துகிறது ஒளிப்பதிவாளர் விக்கியின் கேமரா.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் துள்ளாட்டம் போட வைக்க, பின்னணி இசை காட்சிகளை யூத் ஃபுல்லாக மனம் நிறைக்கிறது.

பள்ளிப் பருவ காதலாக இருந்தாலும் அதை நாகரீகமாக அழகு மிளிர சொல்லத் தெரிந்திருக்கிறது இயக்குனர் கென் கருணாஸுக்கு.

பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கு
மான புரிதலை காட்சிகளில் கையாண்ட
விதத்திலும் முதல் படத்திலேயே அனுபவ இயக்குனர் போல் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
ஒன்றுக்கு மூன்று காதல் இருந்தாலும் எதிலும் விரசம் இல்லை. மாறாக ரசனை இருக்கிறது. அதுவே இயக்கச் சிறப்பின் அடையாளமாகவும் மாறியிருக்கிறது.
படத்தின் பிளஸ்: தெளிந்த நீரோட்டம் போன்ற திரைக்கதை.
பிளாஷ்: கலர்புல் இளைஞர் பட்டாளம்.
ரேட்டிங்: 6.8/ 10.