மாரி செல்வராஜ் தயாரிப்பில் அமீர் நாயகனாக நடிக்கும் புதிய படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் காளமாடன் படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடித்திருந்தார் இயக்குநர் அமீர்.இப்போது மீண்டும் அவ்விருவர் கூட்டணியில் ஒருபடம் உருவாகவிருக்கிறது.

இம்முறை மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமீர் நடிக்கவில்லை.மாரிசெல்வராஜ் தயாரிக்கும் படத்தில் அமீர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தை மாரி செல்வராஜிடன் உதவியாளராகப் பணியாற்றிய அரவிந்த் என்பவர் இயக்குகிறார்.
கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றில் மாரி செல்வராஜின் பங்கள பங்களிப்பு உண்டு உண்டு.
படத்தில் அமீருடன், லப்பர்பந்து புகழ் சுவாசிகா இணைந்து நடிக்கவிருக்கிறார்.
இயக்குநர் அமீர்,தேர்ந்தெடுத்து நடிக்கிற வேடங்கள் எல்லாமே அவரது நடிப்பில் தனி கவனம் பெற்று விடும்.
இந்நிலையில் அவர், நாயகனாகவே நடிக்கிற படம் என்பதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.