ஒரு இரவில் நடக்கும் திகில் பிளஸ் திரில் கதை. அதை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தந்து இருக்கிறார்கள்.
அண்ணன் பிரஜின் ஏற்பாடு செய்த திடீர் திருமணம் பிடிக்காத தங்கை ஷருமிஷா வீட்டை விட்டு வெளியேறி தன்னை சினிமா உயிராக நேசிக்கும் காதலனை கரம்பிடிக்க நினைக்கிறாள். விடிந்தால் திருமணம் என்ற இக்கட்டான சூழலில் முந்தின இரவு தங்கை வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்க… எதிர்பாராத விதமாக அண்ணனிடம் மாட்டிக் கொள்கிறாள். தொடர்ந்து தனி அறைக்குள் பூட் டப்படுகிறாள்.
தான் நினைத்தது போல் காலை பதிவுத்
திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பது அண்ணன் முடிவு.
இதற்கு காரணம், ஏற்கனவே இதே உறவுக்கார மாப்பிள்ளைக்கு தனது பெரிய தங்கையை திருமணம் செய்து வைக்க முனைந்து, அவள் மறுத்து அதனால் அவள் உயிர் போக…
இப்போது சின்ன தங்கைக்கு அதே மாப்பிள்ளை.
அந்த மாப்பிள்ளை நல்லவன் இல்லை என்று தங்கைக்கும் தெரியும். அதனால் காதலன் மூலம் அங்கிருந்து தப்பி விடலாம் என்று எண்ணி அவனை வீட்டுக்கே வர வைக்கிறாள். அவனும் பிரஜன் கண்ணில் மண்ணை தூவி விட்டு வந்து விடுகிறான்.
இதற்கிடையே, ஒருவர் தனது மகளுடன் இரவு மட்டும் பிரஜின் வீட்டில் தங்க அனுமதி கேட்க, அதற்கு பிரஜின் சம்மதிக்கிறார்.
பிரஜின் நினைத்தது போல் அவரது தங்கையை திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை அவரது வீட்டுக்கு வருகிறார்.
இப்போது காதல் ஜோடிகள் அங்கிருந்து தப்பிச்செல்லத் தானே வேண்டும். அதுதான் இல்லை. அந்த மாப்பிள்ளையை கொல்ல வேண்டும். அதன் பிறகு அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்பது அவர்கள் இலக்காக இருக்கிறது. மறுபக்கம், அடைக்கலம் கேட்டு வந்த அப்பா, மகளும் அந்த மாப்பிள்ளையை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்கிடையே பிரஜின் தனது வீட்டு காவலாளியுடன் இணைந்து ஏதோ சில முன்னெடுப்பு வேலைகளை செய்து வருகிறார்.
இப்படி இரவு முழுவதும் அடுத்தடுத்து திரில்
சம்பவங்கள் நடக்கும் அந்த வீட்டில் இறுதியில் திருமணம் நடந்ததா? அல்லது அந்த மாப்பிள்ளைக்கு எதுவும் நேர்ந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை.
அண்ணன் கேரக்டர் என்றாலும் படத்தின் நாயகன் பிரஜின் தான்.
நல்லவரா, கெட்டவரா என்பது தெரியாதபடி வடிவமைக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் பிரஜின் சரியாக
பொருந்தி இருக்கிறார்.
பிரஜினின் தங்கையாக வரும் ஷருமிஷா தனது கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார். பதற்றமான இடங்களில் உணர்வுப்பூர்வமாக அவரது கரிய பெரிய கண்களே
நடித்து விடுகின்றன.
வில்லனாக நடித்திருக்கும் கணேஷ் சாவரட்டில், அதிகம் பேசாமல் பார்வையிலே பயமுறுத்தி விடுகிறார்.
பிரஜினின் மனைவியாக நடித்திருக்கும் நியா வர்கீஸ் அழகாக இருக்கிறார். ஓரளவு நடிப்பும் வருகிறது. தொடர்வாய்ப்பு அமைந்தால் தமிழுக்கு ஒரு நல்ல குணச்சித்திர நடிகை நிச்சயம்
ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் ஒரே வீட்டுக்குள் முழு படத்தையும் படமாக்கி ஆச்சரியப்படுத்துகி றார். குறிப்பாக இரவு நேர காட்சிகளை இவரது கேமரா தந்திருப்பது தனி அழகு.
பின்னணி இசையில் அமர்க்களப் படுத்தியி ருக்கிறார், இசையமைப்பாளர் வி.ஜி.ஹரி கிருஷ்ணன். ஆனால் சில இடங்களில் இசை ஓசையாக மாறி படுத்தவும் செய்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ராம் பிரபா, ஒரு வீட்டுக்குள், ஒரு இரவில் நடக்கும் கதையை எதிர்பாராத திருப்பங்கள் மூலம் சொல்லி நெஞ்சுக்குள் படபடப்பை ஏற்றுகிறார்
கிளைமாக்ஸ் நிச்சயம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
பிளஸ்: ஒரு இரவுக்குள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதைக்களம்.
பிளாஷ்: அந்த முகமூடி மனிதர் யார் என்கிற ட்விஸ்ட்.
மதிப்பெண்: 6/10.
