தற்போதைய காலக்கட்டத்தில் உருவெடுத்துள்ள போதை கலாச்சாரம் இளைஞர்களையும் அவர்கள் குடும்பங்களையும் என்ன பாடு படுத்துகிறது என்பதை
விழிப்புணர்வு படைப்பாகவும், மக்களை யோசிக்க வைக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாகவும் தந்து இருக்கிறார்கள்.
மருத்துவர் ஆவதே எதிர்கால லட்சியம் என்ற கனவோடு சாதிக்கத் துடிக்கும் பள்ளி மாணவன் கேரக்டரில் நாயகன் அஸ்வின் விஸ்வநாத்தின் ஆரம்ப அறிமுகமே வெகு ஜோர்.
போதைப் பழக்கத்திற்கு ஆளா கும் இடம் தொடங்கி
நடிப்பில் வேறு லெவல் அஸ்வினை காண முடிகிறது.
ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பிக்கும் அவரது போதைப் பழக்கம் நாளடைவில் அவரையே அடிமையாக்கி குடும்பத்தினரிடம் இருந்தே அவரை தனிமைப்படுத்தி வரும் இடங்கள் அத்தனையிலும் நடிப்பில் வியாபித்துக் கொண்டே போகிறார்.
ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, ஹரிஹரன், யோகேஷ், ஆர்.வெங்கடரமணன், டி.ராஜேந்திரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் நடிப்பால் அந்தந்த கேரக்டர்களுக்கு வலு சேர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கந்தசாமி கோபாலின் கேமரா கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்மோடு நெருக்கமாக்கும் பணியை செவ்வனே செய்து விடுகிறது.
மீரா லாலின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
போதை வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழக்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பதை காட்சிப் பதிவாக்கி விழிப்புணர்வு படைப்பாகவும் தந்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.வெங்கடரமணன்.
போதைப் பொருட்கள் பள்ளி மாணவர்களிடம் எளிதாக கிடைப்பதையும், அதை அவர்கள் மிக சாதாரணமாக பயன்படுத்துவதையும் காட்டி, எங்கே போகும் இந்த பாதை? என்ற கேள்வியையும் கவலையோடு எழுப்பி இருக்கிறார்.
பிளஸ்: போதையின் பாதையில் இளைய சமுதாயம் என்பதை சுட்டிக்காட்டி இயக்குனர் அடித்திருக்கும் எச்சரிக்கை மணி.
பிளாஷ்: ஏற்ற நேரத்தில் ஏற்ற விதத்தில் சொல்லப்பட்ட திரைக்கதை.
ரேட்டிங்: 6.5 /10.
