எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்க, இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தேசியத் தலைவர் – தேவர் பெருமான்’.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில், இசைஞானி இளையராஜா வெளியிட, நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் ஜே.எம்.பஷிர் தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், பழனிவேல், மூர்த்தி தேவர், ராஜ் மோகன்,ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து மாலையில் சென்னை பிரசாத் லேபில் பிரமாண்ட விழாவாக ‘தேசிய தலைவர் – தேவர் பெருமான்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மேகஞி, அரவிந்தராஜ், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, நடிகை கெளதமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, நடிகர் ஆர்.கே.சுரேஷ், கவிஞர் சினேகன், நூலாசிரியர் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.