தமிழ்த்திரையில் எப்பவாவது அத்தி பூத்தாற் போன்ற சில படங்கள் வரும். அது நம் மனதை வசப்படுத்தும். பல நேரங்களில் நெறிப்படுத்தவும் செய்யும்.
அப்படி ஒரு படம் இந்த ஹபீபி.
ஹபீபி என்றால் அன்பு என்று பொருள்.
நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் அந்த இஸ்லாமிய குடும்பத்தில் மூத்தவர் கஸ்தூரிராஜா. தம்பி குடும்பமும் அவருடன் இணைந்தே நெசவுத்
தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.
கால சுழற்சியில்
நெசவுத் தொழில் நலிவடைந்ததில் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட, அங்குள்ள
குடும்பங்களில் உள்ள பலரும் வெளிநாட்டுக்கு வேலை தேடிப் போக…
அந்தப் பட்டியலில் கஸ்தூரிராஜாவின் தம்பியும் இணை
கிறார்.
தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டுமே வாழ வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் கஸ்தூரிராஜாவின் இப்போதைய ஒரே நம்பிக்கை, பன் னிரெண்டாவது படிக்கும் அவரின் ஒரே மகன் ஈசா.
மகன் படித்து நல்ல வேலைக்கு போவான்; குடும்பத்தை காப்பாற்றுவான் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க..
நடந்ததோ வேறு.
அவனோ பள்ளியில் உடன் படிக்கும் மாணவி மீதான காதலில் காட்டிய தீவிரத்தை படிப்பில் காட்டாமல் போக…
12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து அப்பாவின் கனவை
சிதைக்கிறான்.
இப்போது ஈசாவையும்
வெளிநாட்டுக்கு அனுப்ப உறவினர்கள் முயற்சிக்கிறார்கள்.
வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது பள்ளி காதலி மாளவிகா மனோஜை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதால் ஊரில் கிடைத்த சின்ன சின்ன வேலையை செய்து கொண்டிருக்
கிறான்.
இதற்கிடையே, தன் காதலை மாளவிகாவிடம் சொல்வதற்காக இரவு நேரத்தில் அவரது இல்லத்திற்கு செல்லும் ஈசா, பொதுமக்களிடம் சிக்கிக்கொள்கிறார். காதலிக்கு தன்னால் அவமானம் நேர
வேண்டாம் என முடிவு செய்து, திருடப் போனதாக பொய் சொல்லி ஊர் பஞ்சாயத்தில் கசையடி வாங்குகிறார்.
அதோடு காதல் முடிவுக்கு வருகிறது. அது மட்டுமா?
ஈசாவின்
குடும்பத்திலும் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அவை என்ன ? அதன் மூலம் அந்த குடும்பம் எதிர்கொள்ளும் வலி எத்தகையது? என்பதை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.
முகமது யூசுப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஸ்தூரி ராஜா, பல்வேறு உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி இந்த கேரக்டருக்கு இவர்தான் சரியான தேர்வு என்பதை நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.
ஒரு குடும்பத் தலைவராக குடும்பத்தின் மீதான அவரது கண்டிப்பு கலந்த அக்கறை, தான் நேசிக்கும் நெசவுத் தொழில் புதைக்கப்படும் போது வெளிப்படுத்தும் ஏமாற்றம், கசையடி பட்ட மகனின் நிலை கண்டு கதறி அழுவது என அனைத்து இடங்களிலும் அளவான நடிப்பில் அழகாக ஸ்கோர் செய் கிறார்.
அவரது மகனாக
வரும் அறிமுக நடிகர் ஈசா, காதலியின் அன்பை பெற ஓடிய ஓட்டம் ஒரு ரகம் என்றால், குடும்ப சூழல்
சுழலாக தன்னை சுற்றி வளைத்த போது தன்னை அதற்குள் பொருத்திக் கொள்ளும் நடிப்பு இன்னொரு ரகம். காதலியின் வீட்டுக்குப் போய் மாட்டிக்கொண்டு
பஞ்சாயத்தில் சவுக்கடி வாங்கும் இடத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
முக்காட்டுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு வலம் வரும் மாளவிகா மனோஜ், ‘பேசாமலே பேசும் அந்த காதலை’ அழகுற செய்து இருக்கிறார்.படம் முழுவதும் வசனம் இல்லை என்றாலும், இறுதிக் காட்சியில் அவர் பேசும் அந்த
வசனங்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் குடும்பத்து ஒட்டுமொத்த வலியையும் சொல்லாமல் சொல்லி விடுகிறது.
இஸ்லாமிய பெண்களில் பெண்ணியம் பேசுபவர்களும், தங்களது உரிமைக்காகவும், சுயமரியாதைக்காக
வும் போராடுபவர்களும் உண்டு என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தில் தனாஸ்ரீ பொருத்தமான தேர்வு .
படத்தின் ஆணி வேராக இருப்பது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு. 80-களில் ஆரம்பிக்கும் கதை தொடங்கி
தற்போதைய காலகட்டம் வரை பார்வையாளர்களை தனது கேமராவுடன் இணைத்துக் கொள்கிறார்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் பரம சுகம். குறிப்பாக அந்த கசல் பாட்டு அடடா ரகம்.
வி எஸ் முகமது அமீனின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்
மீரா கதிரவன், மூன்று தலைமுறையை கடந்த ஒரு குடும்பத்தின் வாழ்க்கை சூழலை தனக்கே உரிய திரை மொழியில் அவர் கொடுத்திருப்பது பெருமைக்குரிய படைப்பு இலக்கியம்.
காட்சி மொழியில் மிக இயல்பாக இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல், அவர்களது நட்பு, காதல், எதிர்பார்ப்பு ஆகியவற்றை மிக துல்லியமாக கையாண்டு தேர்ந்த இயக்குனர் வரிசையில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். பொருளாதாரம் ஈட்டுவதற்காக குடும்பத்தை பிரிந்து செல்லும் அவர்களது வலி, அவர்களுக்கானது மட்டும் அல்ல, குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்குமானது என்பதை நாயகன்- நாயகி கிளைமாக்ஸ் சந்திப்பில் உணர்த்தும் விதம் , நிஜமாகவே நெஞ்சுக்குள் சுளீர். கேசட்டில் அன்பை கொட்டி அனுப்பும் கணவன், பதிலுக்கு அன்போடு கண்ணீ கண்ணீரையும் கொட்டி அனுப்பும் மனைவி தொடர்பான காட்சிகள் கண்களில் நீரை வரவழைப்பது நிச்சயம்.
பிளஸ்: மத நல்லிணக்கம் தொடர்பான காட்சிகள்.
பிளாஷ்: இஸ்லாமியர்களின் வாழ்வியலை துல்லியமாக சொன்ன திரைக்கதை.
ரேட்டிங்: 7/ 10.