இளையராஜாவின் இசையில் உருவாகும் ‘இராவணன் சோலையில் சிவன்மலை’

இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் புதிய படங்களின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதோடு, அப்படங்களுக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் புதிய படம் ‘இராவணன் சோலையில் சிவன் மலை’.

ஆர்.எஸ் குளோபல் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.கே.ஸ்ரீதர் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி பாணர் இயக்குகிறார். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்ய, காசி விஸ்வநாத் படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மக்கள் தொடர்பாளராக டைமண்ட் பாபு பணியாற்றுகிறார்.

இந்த திரைப்படத்தின் துவக்க விழா, இளையராஜா ஸ்டுடியோவில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி படத்தை துவக்கி வைத்தார். மேலும், கங்கை அமரன், இயக்குநர் ஞான ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.