ஜிகர்தண்டா-2 திரைவிமர்சனம்

ஜிகிர்தண்டா-2 விமர்சனம்
மதுரையை சேர்ந்த பிபல ரவுடி ராகவா லாரன்ஸை நாயகனாக வைத்து திரைப்படம் இயக்க வரும் எஸ்.ஜே.சூர்யா, அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அது ஏன்? என்பதற்கான கிளைக்கதைகளுடன் கூடிய திரைக்கதையே பரபரப்பான மீதி.
ரவுடியாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், நடிப்பில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆரம்பத்தில்கொடூர முகம காடடும் அவரை போகப்போக நாயக பிம்பத்தக்குள் கொண்டு வரும் இ்டங்களில் இயக்குனர் கார்த்தி்க் சுப்புராஜின் திரைக்கதை பெருமை.
ராகவா லாரன்ஸை கொலை செய்ய நினைக்கும் எஸ்.ஜே.சூர்யா, கதைப்போக்கில் அவருக்கு நெருக்கமானவாத மாறும் காட்சிகளில் தானொரு நடிப்பு அசுரன் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறார்
லாரன்ஸின் மனைவியாக நிமிஷா சஜயன், பழங்குடிப் பெண் வேடத்திற்குள் அச்சாக பொருந்திப்போகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நவீன்சந்திரா, ஒருபோலீசை சுடூடு வன்முறையை தொடங்கி வைக்கும் அந்த கிளைமாக்சில் கொடூர வில்லனாக முத்திரை பதிக்கிறார்.அமைச்சராக நடித்திருக்கும் இளவரசு, நணபனாக சத்யன் ஆகியோரும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஜிகிர்தண்டா முதல் பாகத்தில் ரவுடி -திரைப்பட இயக்குநர் இடையிலான ஒரு பயணம் எப்படி சுவாரசியம் தந்ததோ, அதை விட ஒருபடி மேலாக இந்த இரண்டாமவன் கதை சொன்ன விதத்தில் கவர்கிறான்.