அஜித் படத்தில் இன்னொரு முக்கிய வில்லன்

‘விடாமுயற்சி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அஜிந்த நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார் த்ரிஷா நாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ரெஜினாவும்இருக்கிறார்.

தற்போது படத்தில் இன்னொரு முக்கிய வில்லனான மைக்கேல் கேரக்டரில் ஆரவ்வும் இணைந்திருக்கிறார். அவரது அந்த தேர்வு எத்தகையது என்பதை டைரக்டர் மகிழ் திருமேனியே கூறுகிறார்.

“பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். ‘மைக்கேல்’ கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் திரையுலகின் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. ஆனால், ஆரவ்வின் திறமை பக்கம் என் மனம் சாய்ந்தது. ‘கலகத் தலைவன்’ படத்தின் போதே அவரது அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன். அந்த விஷயம் தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ய வைத்தது. ஆரவ்வின் பெயரை அஜித் சாரிடம் நான் சொன்னபோது, இயக்குநரின் தேர்வில் தலையிடுவதில்லை என்று சொல்லி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். என்னுடைய சாய்ஸ் சரியானது என்று ஆரவ்வும் நிரூபித்து இருக்கிறார். சில ஷெட்யூல் முடித்த பிறகு அஜித் சாரும் ஆரவ் மீது தன் திருப்தியை வெளிப்படுத்தினார்” என்றார்.

படத்தின் தொழில்நுட்ப குழு: இயக்குநர் – மகிழ் திருமேனி, இசை – அனிருத், ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், எடிட்டர் – என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் – மிலன், ஸ்டண்ட் மாஸ்டர் – சுப்ரீம் சுந்தர், ஆடை வடிவமைப்பாளர் – அனு வர்தன், நிர்வாகத் தயாரிப்பாளர் -சுப்ரமணியன் நாராயணன், தயாரிப்பு நிர்வாகி – ஜே கிரிநாதன் / ஜே ஜெயசீலன், ஸ்டில்ஸ் – ஜி. ஆனந்த் குமார், விளம்பர வடிவமைப்பாளர் – கோபி பிரசன்னா,  விஎஃப்எக்ஸ்- ஹரிஹரசுதன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் – ஜிகேஎம் தமிழ்க் குமரன், தயாரிப்பாளர் – சுபாஸ்கரன்