ரெட்ட தல — திரை விமர்சனம்

பாண்டிச்சேரியில் பெற்றோர் இன்றி அனாதையாக வாழும் காளி , தன்னைப் போலவே பெற்றோர் இல்லாமல் இருக்கும் ஆந்த்ரேயை காதலிக்கிறார். ஆனால், காதலிக்கோ அவன் கொண்டு வரும் பணத்தின் மீது அதிக மோகம்.

காதலியின் பணத்தின் மீதான மோகம் காதலனை மேலும் சம்பாதிக்கும் ஆசைக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இந்த நேரத்தில் காளிக்கு, தன்னைப் போலவே இருக்கும் உபேந்திரா அறிமுகம் ஆகிறான்.

இந்த உபேந்திரா ஜெயிலில் இருந்து பரோலில் வந்த ஒரு குற்றவாளி. அது தெரியாமல் காதலியின் பணத்தா சையால் உந்தப்பட்ட காளி, உபேந்திரா இடத்துக்கு தான் வந்து ராஜபோக வாழ்க்கை வாழலாம் என்ற நப்பாசையில் அவனைe கொன்று விடுகிறான்.

இப்போது காளி உபேந்திராவாகவே மாறி விட, இனி பணக்கார வாழ்க்கை தான் என்று குதூலித்த நேரத்தில் வருகிறது பிரச்சனை. உபேந்திரா மீதான வழக்கு தொடங்கி அவனது முந்தைய அக்கிரமங்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்து காளியை பதம் பார்க்கிறது.
இப்போது காளியின் நிலை என்ன? அவன் காதலி என்னவானாள் என்பது அதிரடி ஆக்சன் பின்னணியிலான wகதைக்களம்.

அனாதை காளி- பணக்கார உபேந்திரா என இரட்டை வேடங்களில் அருண் விஜய் ‘ரெட்ட தல’ யாக வருகிறார். தோற்றத்தில் மட்டுமி ன்றி நடை உடை பாவனைகளிலும் நடிப்பில் ஏகப்பட்ட வேறுபாடு காட்டுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் பல இடங்களில் ரிஸ்க் எடுத்து ரசிகர்களின் கரகோஷம் பெறு கிறார். நாயகியாக வரும் சித்தி இத்னானி, கதையின் மையப்புள்ளியே தன் கேரக்டர் தான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி வில்லன் கோஷ்டியின் நிலைய வித்வான்களாக படம் நெடுக வலம் வருகிறார்கள். சில காட்சிகளே என்றாலும் நடிப்பில் பாலாஜி முருகதாஸ் தனித்து தெரிகிறார்.

டிஜோ டாமியின் கேமரா மொத்த படத்தையும் வித்தியாசமான eகோணங்களில் ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில், தனுஷ் பாடும் “கண்ணம்மா..” பாடல் ரசிக்க வைக்க, பின்னணி இசை காட்சிகளின் eவிறுவிறுப்புக்கு உத்தரவாதம் ஆகிறது.

எழுதி இயக்கியிருக்கும் கிரிஷ் திருக்குமரன், ஆசையே அனைத்திற்கும் காரணம் என்ற கருத்தை மையமாக வைத்து அதற்கு கமர்சியல் முலாம் பூசி இருக்கிறார், அழகாகவே.

முதல் பாதி வேகம். மறு பாதி திருப்புமுனை காட்சிகள் என்று எடுத்துக்கொண்டு கடைசி வரை வேகம் குறையாமல் இயக்கி இருக்கிறார்.

‘ரெட்ட தல’ ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு அதிரடி விருந்து.