மேட் இன் கொரியா — திரை விமர்சனம்

பிரியங்கா மோகனின் வாழ்க்கைக் கனவே எப்படியாவது ஒருமுறை கொரியா சென்று வருவது. பள்ளிப் பருவத்தில் தொடங்கிய அந்த கனவு ஒரு கட்டத்தில் நனவாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை அவரை கொரியாவுக்கு விமானம் ஏற்றி அனுப்பி வைக்கிறது. மகிழ்ச்சியாக செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துயரத்துடன் செல்லும் அவர், அங்கு சென்ற பிறகு தன் கனவு தேசத்தில் கவலை மறந்து தன்னை மகிழ்ச்சியாக உணரும் தருணம் தானாக அமைகிறது.
அது எப்படி என்பது உருக்கமும் மனதுக்கு நெருக்கமுமான கிளைமாக்ஸ்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் மொத்த படத்தையும் தனது இயல்பான நடிப்பினால் தாங்கிப் பிடிக்கிறார்.
கடைசி நிமிடத்தில் ஏமாற்றப்பட்ட காதலர் மூலம் சுமக்கும் வலியை நடிப்பால் நமக்குள் கடத்திவிடுவது தனி அழகு. கொரியாவில் அந்த பாட்டி & அண்ட் கோவுடனான அவரது படிப்படியான அன்பு காட்சிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. கொரியாவில் திருட்டுப் பழியை சுமந்து நிற்கும் இடத்தில் அந்த தவிப்பு மனதின் வழியாக வெளிப்படும் நடிப்பில் உயிர் பெறுகிறது.
அந்த கொரியா பாட்டியும் பாசப் பிணைப்பில் நம்மை உருக வைக்கிறார்.
பிரியங்கா மோகன் காதலனாக வரும் ரிஷிகாந்த் கொரியா சென்று வந்த முன்னாள் காதலியை சந்திக்கும் இடத்தில் தனது கேரக்டர்
தேர்வை நியாயப்படுத்து
கிறார்.

இயற்கை எழில் மிகு ஊட்டி மற்றும் அழகே அழகான கொரியா என இரண்டு வெவ்வேறு களங்களில் காட்சிகள் பயணித்தாலும், இரண்டிலுமே கேமரா ஜாலம்
புரிந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னாகுமார்.
ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை கதையோடு இணைந்து நெஞ்சுக்குள் நேசம் கூட்டுகிறது.
செம்பா என்ற சிறு வயது பெண்ணின் கொரியா கனவை கதையின் இயல்பான போக்கில் நனவாகிய இயக்குனர் ரா.கார்த்திக், இப்போது நமக்குள்ளும் கொரியா கனவுக்கு வழிவகுத்து விட்டார், இயல்பான திரைக்கதை வழியே.

படத்தின் பிளஸ் : அர்த்தமுள்ள திரைக்கதை.
படத்தின் கிளாஸ் :பிரியங்கா மோகன்.
ரேட்டிங்: 5.5/10.
இந்தத் திரைப்படம் தற்போது நெட்
பிளிக்சின் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.